அட்டப்பாடி முன்சிப் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் திறப்பு

பாலக்காடு,ஜன.7: கேரளமாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி முன்சிப் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் காணொலி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அட்டப்பாடியில் முன்சிப் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை திறந்து வைத்து முதல்வர் பேசுகையில்: இடதுசாரி கட்சியினர் அரசு ஆட்சிக்கு வந்தப்பின் 101 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது. ஓய்வு பெறும் அரசு வக்கீல் அதிகாரிகளுக்கு ஓய்வு ஊதியம் ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.10 லட்சம் வரை வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. மருத்துவ செலவிற்காக 5 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்வு செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசு ஆட்சியினர் முயற்சி காரணமாக அட்டப்பாடியில் புதிய முன்சிப் மஜிஸ்திரேட் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.அட்டப்பாடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும் நீதிமன்றம் தேவை என்பது, தற்போது அவர்களின் கனவு நனவாகி உள்ளது.அட்டப்பாடி மலைவாழ்மக்களின் வழக்குகள் சம்பந்தமாக மன்னார்க்காட்டிற்கு 40 கி.மீ தொலைவிற்கு சென்று வரவேண்டியுள்ளது. உள் துறை சார்பில 20.10 லட்சம் ரூபாய் செலவீட்டில் அட்டப்பாடியில் முன்சிப் மஜிஸ்திரேட் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது.

இந்த நீதிமன்றத்தில் அனைத்து வசதிகளும் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. அட்டப்பாடி அகழி கிராமப்பஞ்சாயத்து இ.எம்.எஸ்.,கலையரங்கில் நடைபெற்ற விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி முக்கியவிருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார்.உயர்நீதிமன்ற நீதிபதியும், பாலக்காடு ஜூடிஷியல் மாவட்டத்தின் பொறுப்பு வகிக்கின்ற நீதிபதி தினேஷ்குமார் சிங்க் கல்வெட்டை திறந்து வைத்தார். பாலக்காடு பொதுப்பணித்துறை அதிகாரி ராஜேஷ்சந்திரன் அறிக்கை சமர்ப்பித்தார்.

முதன்மை மாவட்ட செஷன்ஸ் நீதிபதி அனந்தகிருஷ்ண நவாடா,தலைமை ஜூடிஷியல் மஜிஸ்திரேட் ஸ்ரீஜா, அட்டப்பாடி பிளாக் பஞ்சாயத்து தலைவர் மருதிமுருகன், அகழி கிராமப்பஞ்சாயத்துத் தலைவர் அம்பிகா லட்சுமணன்,பாலக்காடு ஏ.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், ஆதிவாசியினர் மேம்பாட்டுநலத்துறை அதிகாரி சுரேஷ்குமார்,மக்கள் பிரதிநிதிகள்,அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அட்டப்பாடி முன்சிப் மஜிஸ்திரேட் நீதிமன்றம் திறப்புவிழாவில் கலந்து கொண்டனர்.

The post அட்டப்பாடி முன்சிப் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: