வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வகையில், புதிய மசோதா : ஒப்புதலுக்காக பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிவைப்பு!!

டெல்லி : வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வகையில், புதிய மசோதா ஒன்று உருவாக்கப்பட்டு ஒப்புதலுக்காக பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் முற்றுகையிடும் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் ஓர் ஆண்டை நெருங்கும் நிலையில், கடந்த 20ம் தேதி தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். ஒன்றிய அரசின் இந்த முடிவை விவசாயிகள் வரவேற்றாலும் வேளாண் சட்டங்கள் சட்டப்பூர்வமாக ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து இருந்தனர். இது குறித்து 6 கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றையும் அவர்கள் பிரதமர் மோடிக்கு அனுப்பி இருந்தனர். இந்த நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யும் வகையிலும் புதிய சட்ட முன்வடிவினை ஒன்றிய அரசு தயாரித்துள்ளதாகவும் ஒப்புதலுக்காக பிரதமர் அலுவலகத்திற்கு அது அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த சட்ட முன்வடிவு, 3 தனித்தனி மசோதாக்களாக இல்லாமல் விரிவான ஒரே மசோதாவாக இருக்கும் என்றும் தெரிகிறது. விவசாயிகள் கோரி வரும் குறைந்தபட்ச ஆதரவு விலை பிரச்சனையை சட்டப்பூர்வ வடிவில் கையாள்வது குறித்து ஒன்றிய வேளாண் அமைச்சகமும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. …

The post வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வகையில், புதிய மசோதா : ஒப்புதலுக்காக பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிவைப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: