பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை: ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேட்டி


டெல்லி: தற்போது பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் பேட்டி அளித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுவதை ஒட்டி அதற்கு முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.6 முதல் ரூ.10 வரை குறைக்கப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில், தற்போது பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை என தெரிவித்துள்ளார். “நோ ப்ரோபோசல், வதந்திதான் என்றும் பெட்ரோல், டீசல் விலை குறையாது என்று அரசு அறிக்கை வந்துள்ளது.

உண்மையில், பணவீக்கத்தில் இருந்து சாமானியர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல், டீசல் விலையை 6 முதல் 10 ரூபாய் வரை குறைக்கலாம் என்று டிசம்பர் 28ஆம் தேதி செய்தி வந்தது. இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் தற்போது இந்த செய்திக்கு ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் பூரி இன்று தெரிவித்தார், இது வெறும் வதந்தி மட்டுமே. கடந்த வாரம் வந்த செய்தியை அரசு நிராகரித்துள்ளது. ஹர்தீப் சிங் பூரியின் இந்த அறிக்கைக்குப் பிறகு, எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளில் திடீர் உயர்வு ஏற்பட்டது. ஏனெனில், எண்ணெய் விலை குறைப்பு ஏற்பட்டால், அது அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் கீழ் செய்யப்படும் என்றும், 50:50 ஃபார்முலாவின் கீழ் விலை குறைப்பு ஈடுசெய்யப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது எரிபொருள் விலை குறைப்பு தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். அரசிடம் அவ்வாறான எந்த முன்மொழிவும் இல்லை. இது ஊடகங்களில் வரும் ஊகங்கள் மட்டுமே. அரசாங்கத்தின் இந்த அறிக்கைக்குப் பிறகு, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) பங்குகளில் 3.27% உயர்வு பதிவு செய்யப்பட்டது. அதேசமயம் BPCL பங்குகள் 1.06% மற்றும் IOCL பங்குகள் 1.76% அதிகரித்தன. மே 2022 முதல் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்று சொல்லலாம். கடந்த முறை கலால் வரியை ஒன்றிய அரசு குறைத்தது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) பெட்ரோல் மற்றும் டீசல் விலை டெல்லியில் இருந்து கொல்கத்தா வரை நிலையானதாக உள்ளது. இன்று டெல்லியில் (டெல்லியில் பெட்ரோல் விலை) ரூ.96.72 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.89.62 ஆகவும் உள்ளது. மும்பையில் பெட்ரோல் விலை ரூ.106.31 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.27 ஆகவும் உள்ளது. சென்னையைப் பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 ஆகவும், கொல்கத்தாவில் பெட்ரோல் விலை ரூ.106.03 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.92.76 ஆகவும் உள்ளது.

 

The post பெட்ரோல் டீசல் விலையை குறைப்பதற்கான திட்டம் எதுவும் எங்களிடம் இல்லை: ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: