புகழ்பெற்ற வேலூர் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா: கே.வி.குப்பம் ஆட்டுச் சந்தையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கே.வி.குப்பத்தில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழா இன்று நடைபெற உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. திருவிழாவிற்கு லட்சக்கணக்கானோர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஏராளமான பக்தர்கள் ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.

இதை முன்னிட்டு காட்பாடி, கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன. அவற்றில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், நெல்லூர் கெடா போன்ற ரக ஆடுகளின் வரத்து அதிகமாக இருந்தது. சந்தை தொடங்கிய சற்று நேரத்திலேயே 600க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகின. சிறிய ஆடுகள் ரூ.7,000 வரையும், பெரிய ஆடுகள் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரை விலை போகின. மொத்தமாக ரூ.20 லட்சம் மேல் வியாபாரமனதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

The post புகழ்பெற்ற வேலூர் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா: கே.வி.குப்பம் ஆட்டுச் சந்தையில் களைகட்டிய ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Related Stories: