வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின் தியாக அத்தியாயங்களைத் தம் வீரத்தால் எழுதிய முன்னோடிகளான வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று. வரி கட்ட மறுத்து, ஆங்கிலேயர்களின் படைப்பலத்தை எதிர்த்து, உயிரைவிடத் தன்மானமே பெரிதெனத் தமிழரின் பண்பைப் பறைசாற்றிய இவ்விருவரின் வீரத்தை இந்தியர் அனைவரும் அறிய வேண்டும்! 1857 சிப்பாய்க் கலகத்துக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே விடுதலைப் போராட்ட விதைகளை ஊன்றிய மண் தமிழ்நாடு எனத் தம் நெஞ்சில் பதியவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் appeared first on Dinakaran.

Related Stories: