நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 92% நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர் தகவல்

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 92 சதவீத நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன் மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய 4 வட்டங்களுக்கு முழுமையான குடும்ப அட்டைகளுக்கு 6,000 ரூபாயும், ராதாபுரம் மற்றும் திசையன்விளை வட்டத்தில் உள்ள 11 கிராமங்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள குறைவாக பாதிக்கப்பட்ட வட்டங்களுக்கு 1000 நிவாரண தொகை கடந்த 29ம் தேதி முதல் டோக்கன் வழங்கப்பட்டு ரேஷன் கடை மூலம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 92 சதவீத நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். நிவாரண தொகையை பெறுவதற்கு நாளையே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கன் பெற்றவர்கள், நாளை கட்டாயம் நிவாரண தொகையை பெற்றுக்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். கடைசி நாளான நாளை மாலை 5 மணி வரை நிவாரண தொகை வழங்கப்படும். 4ம் தேதி முதல், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழக்கமான அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் நடைபெறும் என்று நெல்லை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

The post நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 92% நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது: மாவட்ட ஆட்சியர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: