விருதை திருப்பி தந்த வீராங்கனை இப்படிப்பட்ட கொடுமையில் பிரதமருக்கும் பங்கிருக்கிறது: ராகுல் காந்தி வேதனை

புதுடெல்லி: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளானவருமான பாஜ எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஆதரவாளர்கள் சம்மேளனத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உலக சாம்பியன் பதக்கம் வென்ற வீராங்கனை வினேஷ் போகத் தனது கேல்ரத்னா மற்றும் அர்ஜூனா விருதுகளை பிரதமர் இல்லத்திற்கு செல்லும் சாலையில் வைத்துவிட்டுச் சென்றார்.

இதுதொடர்பான வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘நாட்டின் ஒவ்வொரு மகளுக்கும் சுயமரியாதைதான் முக்கியம். அதன்பிறகுதான் பதக்கமும், மரியாதையும். பாகுபலி என தன்னை கூறிக் கொள்ளும் ஒருவரிடமிருந்து கிடைத்த அரசியல் பலன், இந்த துணிச்சலான மகள்களின் கண்ணீரை விட அதிகமானதா? பிரதமர் தேசத்தின் காவலர். ஆனால் இதுபோன்ற கொடுமையில் அவரின் பங்கும் இருப்பது வேதனை தருகிறது’ என கூறி உள்ளார்.

The post விருதை திருப்பி தந்த வீராங்கனை இப்படிப்பட்ட கொடுமையில் பிரதமருக்கும் பங்கிருக்கிறது: ராகுல் காந்தி வேதனை appeared first on Dinakaran.

Related Stories: