ஜெயங்கொண்டத்தில் அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த விளக்க துண்டு பிரசுரம் வழங்கல்

 

பெரம்பலூர்,டிச.31: அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து ஓய்வுபெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதையொட்டி பெரம்பலூரில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து ஓய்வுபெற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஓய்வுபெற்ற நலச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமையில், ஓய்வூதியர்களுக்கு ஒப்பந்தப்பலன், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தையே அமுல்படுத்த வேண்டும், இறந்த தொழிலாளர்களின் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதை முன்னிட்டு பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டு பகுதியில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

The post ஜெயங்கொண்டத்தில் அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த விளக்க துண்டு பிரசுரம் வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: