எஸ்.ஏ. கலை, அறிவியல் கல்லூரியில் நிதி, வரிகள் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம்

 

திருவள்ளூர்: சென்னை அடுத்த திருவேற்காட்டில் அமைந்துள்ள எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கல்லூரி தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா உத்தரவின் பேரில் முதுநிலை வணிகவியல் துறை மற்றும் மேலாண்மைப் பள்ளி ஒருங்கிணைந்து ‘நிதி மற்றும் வரி எழுத்தறிவு இயக்ககம்’ என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கினை நடத்தியது.

இந்த பயிலரங்கம் மாணவர்களிடத்து வங்கி முறை, காப்பீடு, நேரடி வரிகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகளைப் படிப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. இந்த பயிலரங்கில் பட்டயக் கணக்காளர்கள் சந்தியா, ஹேமகுமார், யுவமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர்.

மேலும் ‘வங்கி மற்றும் காப்பீடு’ என்ற தலைப்பில் வங்கிகள் வழங்கும் சேவைகள் குறித்து ஹேமகுமார் விவரித்தார். சந்தியா நேரடி வரிகள் பற்றியும், யுவமூர்த்தி நிதி அறிக்கைகள் பற்றியும் உரை நிகழ்த்தினர். இப்பயிலரங்கின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக வணிகவியல் துறைத்தலைவர் சுரேஷ், ஒருங்கிணைப்பாளர்களாகத் கிறிஸ்து கமல்ராஜ், கிருபானந்தன் ஆகியோர் நடத்தினர்.

The post எஸ்.ஏ. கலை, அறிவியல் கல்லூரியில் நிதி, வரிகள் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: