செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சிசிடிவி கேமரா பொருத்த கோரிக்கை

செங்கல்பட்டு: தென் மாவட்டத்தில் இருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்லும் அனைத்து ரயில்களும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நின்று செல்லும். அந்த அளவிற்கு மிக முக்கிய ரயில் நிலையமாக செங்கல்பட்டு ரயில் நிலையம் இருந்து வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருசக்கர வாகனத்தை நிறுத்திச் செல்வதால் தினந்தோறும் இருசக்கர வாகன திருட்டும் நடைபெற்று வருகிறது. வாகனத்தை பறிகொடுத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தாலும், ரயில் நிலையம் அருகே சிசிடிவி கேமரா இல்லாதலால் திருடு போன இருசக்கர வாகனங்களை கண்டு பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனவே செங்கல்பட்டு ரயில்வே நிர்வாகம் இருசக்கர வாகனங்கள் ரயில் நிலையம் அருகே நிறுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது சிசிடிவி கேமராவை பொருத்தி கண்காணிக்க வேண்டும். மேலும் ரயில் பயணிகள் நடந்து செல்ல வழி வகை செய்து தர வேண்டுமென பயணிகள், பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் தீட்டியுள்ளனர்.

The post செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சிசிடிவி கேமரா பொருத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: