ஏற்கனவே சிறுத்தை தாக்கியதில் சிறுமி உயிரிழந்த நிலையில் சிறுவன் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து 6 சிறுத்தைகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு 2 வனப்பகுதியில் விடப்பட்டு, 1 விசாகபட்டினத்திலும் மற்ற 3 திருப்பதியில் உள்ள உயிரியல் பூங்காவிலும் வைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பக்தர்களை வனவிலங்குகள் தாக்காத வகையில் வனப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.
கடந்த 16ம் தேதி மற்றும் 26, 29 தேதிகளில் சிறுத்தையும், கரடியும் வந்து சென்றிருப்பது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்யப்பட்டு இரவு நேரங்களில் செல்ல கூடிய பக்தர்கள் மற்றும் பகல் நேரத்தில் செல்லக்கூடிய பக்தர்கள் கூட்டம், கூட்டமாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் பக்தர்கள் திருப்தியிலிருந்து, திருமலைக்கு செல்லும் போது அவர்களுக்கு கைத்தடி வழங்கப்பட்டு வருகிறதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post திருப்பதியில் மீண்டும் சிறுத்தைப் புலி, கரடி நடமாட்டம்: பக்தர்கள் கூட்டமாகச் சென்று வர வனத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.
