இந்தியாவுக்கு மோடி செய்தது என்ன?: வரும் தேர்தல் இந்துத்துவாவுக்கும், மக்கள் நலனுக்கும் இடையேயானது: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கருத்து

டெல்லி: வரும் தேர்தல் இந்துத்துவாவுக்கும் மக்கள் நலனுக்கும் இடையேயானது என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கருத்து தெரிவித்துள்ளார். ஜனவரி.22ல் அயோத்தியில் ராமர் கோயிலையும் பிப்ரவரி.14ல் அபுதாபியில் இந்துக் கோயிலையும் பிரதமர் திறந்து வைக்கிறார். 2 கோயில்களும் திறக்கப்பட்ட பின் இந்தியாவில் விரைவில் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கிறேன். 2009ல் பொருளாதார வளர்ச்சியின் அவதாரமாகவும் குஜராத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் மோடி காட்சிப்படுத்தப்பட்டார். அனைத்து இந்தியர்களுக்கும் மோடி வளர்ச்சியை கொண்டு வருவார் எனக் கூறப்பட்டது. 2019ல் பணமதிப்பிழப்பு என்ற பேரழிவு நடவடிக்கைக்குப் பின் மோடியின் கதை சரிந்தது. புல்வாமா தாக்குதல், மோடிக்கு பொதுத் தேர்தலை தேசிய பாதுகாப்பு தேர்தலாக மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியது.

இந்தியாவுக்கு மோடி செய்தது என்ன?

2024ல் நரேந்திர மோடியை இந்துக்களின் இதய சக்கரவர்த்தியாக பாஜக முன்னிறுத்தும் என்பது தெளிவாகிறது. நீங்கள் இந்தியாவுக்கு செய்தது என்ன? என்பது போன்ற சில கேள்விகள் தற்போது எழுகின்றன. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் என்ன ஆனது? பொருளாதார வளர்ச்சி என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்குகளிலும் செலுத்தக் கூடிய வருமானம் என்ன ஆனது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

The post இந்தியாவுக்கு மோடி செய்தது என்ன?: வரும் தேர்தல் இந்துத்துவாவுக்கும், மக்கள் நலனுக்கும் இடையேயானது: காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: