காரைக்கால் வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் ரோட்ராக்ட் சங்க துவக்க விழா

 

காரைக்கால், டிச.30: காரைக்கால் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரோட்ராக்ட் சங்க தொடக்க விழா நடந்தது. காரைக்கால் அடுத்த செருமாவிலங்கையில் உள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் ரோட்ராக்ட் சங்க துவக்க விழா நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் புஷ்பராஜு தலைமை வகித்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

கல்லூரியின் ரோட்ராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜார்ஜ் பாரடைஸ் வரவேற்றார். இவ்விழாவிற்கு காரைக்கால் ரோட்டரி சங்க துணை ஆளுநர் சம்பத், ரோட்டரி சங்க மாவட்ட தலைவர் இளங்கோவன், ரோட்டரி சங்க தலைவர் அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் ரோட்ராக்ட் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜார்ஜ் பாரடைஸ், பஜன்கோ ரோட்ராக்ட் சங்க புதிய தலைவர்கள், துணை தலைவர்களை, பொருளாளர் மற்றும் சங்க உறுப்பினர்களை அறிமுகப்படுத்தினார்.

மேலும் பஜன்கோ ரோட்ராக்ட் சங்க தலைவராக மாணவர் பரணிதரன், துணைத் தலைவராக மாணவி துர்க்காதேவி பதவியேற்றனர். 2024ம் ஆண்டுக்கான பஜன்கோவா கல்லூரி ரோட்ராக்ட் சங்க செயல் திட்டத்தை ரோட்ராக்ட் சங்க தலைவர் பரணிதரன் வழங்கினார். காரைக்கால் ரோட்டரி சங்க தலைவர் அருள்ராஜ் தனது வாழ்த்துரையில் மாணவர்கள் தவறான வழியில் கைபேசிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் சாலை ஓரம் வீற்றிருக்கும் முதியோர்களையும் ஆதரவற்றோர்களையும் பாதுகாப்பது நமது கடமை என்றும் வலியுறுத்தினார்.

The post காரைக்கால் வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் ரோட்ராக்ட் சங்க துவக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: