வன்கொடுமை சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு கண்காணிப்பு குழுக்கூட்டம்

 

புதுக்கோட்டை, டிச.30: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான வன்கொடுமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்தும், அதன்மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இயன்முறையில் மனித கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இத்துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்துல் ரசூல், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post வன்கொடுமை சட்டம் தொடர்பாக விழிப்புணர்வு கண்காணிப்பு குழுக்கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: