பிலிச்சிகுழி ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

 

ஜெயங்கொண்டம், டிச.28: ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம்,பிலிச்சிக்குழி ஊராட்சியில், தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க, தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை உடையார்பாளையம் கோட்டம் சார்பில் நடைபெற்ற, சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமினை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.

கால்நடை மருத்துவ முகாமில் 303 பசு மாடுகள்,12 எருமை மாடுகள் 45 செம்மறி ஆடு 580 வெள்ளாடு 40 நாய் 60 கோழிகள் ஆகியவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கால்நடை உதவி இயக்குநர் மருத்துவர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேஸ்வரி வீரமோகன், ஊராட்சிமன்ற தலைவர் சுந்தர்ராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் .சிவா, தத்தனூர் கால்நடை மருத்துவர்கள் இளையராஜா, செந்தில் மற்றும் மருத்துவ அலுவலர்கள், கால்நடை பணியாளர்கள், கால்நடை விவசாயிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

The post பிலிச்சிகுழி ஊராட்சியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: