கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு: காங்.கூட்டணிக்கு அழைப்பு?

திருமலை: ஆந்திராவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடக்க உள்ளது. தற்போதைய ஆளும் கட்சியான ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரசை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். இதற்கேற்ப தனது சொந்த ெதாகுதியான சித்தூர் மாவட்டம் குப்பத்தில் நேற்று முதல் சுற்றுப்பயணம் தொடங்கி உள்ளார்.இதில் பங்கேற்க ஐதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் நேற்று சந்திரபாபுநாயுடு வந்தார். அங்கு கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவக்குமார் காத்திருந்து சந்தித்துள்ளார்.

அப்போது இவர்கள் இருவரும் சுமார் 15 நிமிடங்கள் தனியாக சென்று பேசினர். இந்த சந்திப்பு குறித்து பேட்டியளித்த சந்திரபாபு நாயுடு, `டி.கே.சிவக்குமாருடன் எப்போதும் நல்ல நட்பு உள்ளது. அவரை ஏதேச்சையாகத்தான் சந்தித்தேன். அரசியல் குறித்து பேசவில்லை’ என்றார்.இதையடுத்து சந்திரபாபுநாயுடு அங்கிருந்து குப்பம் தொகுதிக்கு காரில் சென்றார். இந்த சந்திப்பு எதிர்பாராமல் நடந்ததாக கூறப்பட்டாலும், சந்திரபாபு நாயுடுவின் வருகையை டி.கே.சிவக்குமார் எதிர்பார்த்து விமான நிலையத்தில் காத்திருந்து சந்தித்துள்ளார்.

அவர்கள் தனியாக சென்று அரசியல் கூட்டணி குறித்து சில தகவல்களை பரிமாறிக்கொண்டதாகவும், இருவரும் மீண்டும் சந்தித்து பேச முடிவு செய்ததுள்ளதாகவும் தெலுங்கு தேச நிர்வாகிகள் கூறினர். காங்கிரஸ் மேலிட உத்தரவின்பேரிலேயே டி.கே.சிவக்குமார், சந்திரபாபு நாயுடுவை விமான நிலையத்தில் சந்தித்து சில தகவல்களை தெரிவித்ததாக காங்கிரசார் தரப்பில் கூறப்படுகிறது.

The post கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு: காங்.கூட்டணிக்கு அழைப்பு? appeared first on Dinakaran.

Related Stories: