அமோனியா வாயு கசிவு விவகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை

சென்னை, டிச.28: சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலைக்கு அமோனியா திரவம் அவ்வப்போது வெளிநாடுகளில் இருந்து கப்பல் மூலம் இறக்குமதி செய்யப்படுகிறது. எண்ணூரில் அமைந்துள்ள சிறு துறைமுகத்திலிருந்து உரிய குழாய்கள் மூலமாக இந்த தொழிற்சாலையில் உள்ள சேமிப்புத் தொட்டியில் அமோனியா சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த தொழிற்சாலையில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு திடீரென அமோனியா வாயு வெளியேறியதால் தொழிற்சாலையின் அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசித்துவந்த பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன.

உடனடியாக அரசு சார்பில் ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த தனியார் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் எண்ணூரில் வாயு கசிவு விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. தொடர் விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post அமோனியா வாயு கசிவு விவகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: