மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முதல்வரிடம் ரூ.5 லட்சம் நிதி

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் எதிர்பாராத பெரும் தாக்குதலை நிகழ்த்தியபோது, அந்த சவால்களை எதிர்கொண்டு போர்க்கால அடிப்படையில் மக்களை காக்கும் பணியில் இமைப்பொழுதும் துஞ்சாது ஓய்வின்றி சுற்றிச்சுழன்று பணியாற்றும் தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து, பாராட்டினார். அப்போது இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தார்.

The post மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முதல்வரிடம் ரூ.5 லட்சம் நிதி appeared first on Dinakaran.

Related Stories: