ஒன்றிய அரசு அதிகாரிகள் கூறுகையில்,‘‘ ஜேஎன்.1 வைரஸ் பரவல் அதிகரித்து வந்தாலும், உடனடியாக எந்த அபாயமும் இல்லை. ஏனென்றால்,இதில் பாதிக்கப்பட்ட 92 சதவீதம் பேர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் இது மிதமான பாதிப்புதான் என்பது தெரியவருகிறது’’ என்றனர். இதற்கிடையே,நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், 628 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 4,054 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் ஒருவர் பலியானதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை,5,33,334 ஆக உயர்ந்துள்ளது என ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாடு முழுவதும் 63 பேருக்கு ஜேஎன்.1 வைரஸ் பாதிப்பு appeared first on Dinakaran.