ரூ.3 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

 

திருப்பூர், டிச.25: திருப்பூர் கோன் அட்டை சிறு வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்தனர். தமிழகம் முழுவதும் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அங்குள்ள பொதுமக்கள் உணவு, உடை மற்றும் அத்தியாவசிய பொருட்களை இழந்து தவிக்கின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசும், பல்வேறு பொதுநல அமைப்புகளும் உதவி செய்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக திருப்பூர் கோன் அட்டை சிறு வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் 2 டன் அரிசி, பிஸ்கட்,தண்ணீர் கேன்கள், பாய், பெட்ஷீட் மற்றும் பெண்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொருட்களை சிறு கோன் அட்டை வியாபாரிகளிடம் இருந்து பெறப்பட்டு தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக லாரிகள் மூலம் அனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கோன் அட்டை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் பாலகிருஷ்ணன், பொருளாளர் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ரூ.3 லட்சம் மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Related Stories: