இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 140 தனியார் பல்கலை கழகங்கள் தொடக்கம்; குஜராத்தில் 28, தமிழகத்தில் 4: கல்வி அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 140 தனியார் பல்கலை கழகங்கள் நிறுவப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சகம் வௌியிட்டுள்ள புள்ளிவிவரப் பட்டியலில், “2018-19ம் கல்வியாண்டில் அதிகபட்சமாக 40 தனியார் பல்கலை கழகங்கள் நிறுவப்பட்டன. அதேசமயம் 2021-22 கல்வியாண்டில் கடந்த 5 ஆண்டுகளில் 34 தனியார் பல்கலை கழகங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலத்தில் அதிகபட்சமாக 28, மகாராஷ்டிராவில் 15, மத்தியபிரதேசத்தில் 14, கர்நாடகாவில் 10, சட்டீஸ்கரில் 7, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலங்களில் 6, தெலங்கானா, பீகார், ஒடிசா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் 5, தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம், ஒடிசா, மணிப்பூர், அரியானா, உத்தரபிரதேசம், சிக்கிம் ஆகிய 7 மாநிலங்களில் தலா 4 தனியார் பல்கலை கழகங்கள் நிறுவப்பட்டுள்ளன. பல்கலை கழக மானிய குழுவின் குறிப்பிட்ட அனுமதியின்றி பொதுவான பட்டப்படிப்புகளை பயிற்றுவிக்க இதுபோன்ற தனியார் பல்கலை கழகங்களுக்கு அதிகாரம் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட பல்கலைகழகங்களுக்கு எதிராக எந்த விதிமீறல்களும் பதிவாகவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 140 தனியார் பல்கலை கழகங்கள் தொடக்கம்; குஜராத்தில் 28, தமிழகத்தில் 4: கல்வி அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: