தேனி காவல்துறையின் சார்பில் நடந்த மாரத்தான் போட்டி; 1000 வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..!!

தேனி: தேனி மாவட்ட காவல்துறையின் சார்பில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடைபெற்றன. பெரியகுளத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 2, 4, 6, 8, 10, 21 கிலோ மீட்டர் தூரம் என 6 பிரிவுகளின் கீழ் தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா, தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே ஆகியோர் மாரத்தான் போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இப்போட்டியில் திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 6 போட்டிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு ரொக்க பரிசுகளையும், பாராட்டு சான்றிதழ்களையும் தேனி மாவட்ட ஆட்சியரும், காவல்துறை கண்காணிப்பாளரும் வழங்கினர். முன்னதாக விழா மேடையில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

The post தேனி காவல்துறையின் சார்பில் நடந்த மாரத்தான் போட்டி; 1000 வீரர், வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: