புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 38 ஆண்டுகளுக்கு பின் ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள்

நாட்றம்பள்ளி : நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் 38 ஆண்டுகள் கழித்து ஒன்று கூடி நினைவுகளை பரிமாறிக் கொண்டனர். அப்போது பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் 1985 -86 ஆண்டு முன் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் 38 வருடங்கள் கழித்து மறுபடியும் ஒன்றிணைந்து சந்தோஷங்களை பரிமாறிக் கொண்டனர்.

ஒவ்வொரு வருடமும் அனைவரும் சந்தித்து அனைவரின் சந்தோஷ- துக்கங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்தனர். இதனை அடுத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தனர்.இந்நிகழ்ச்சியில் கடந்த கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் முதல் மூன்று இடத்தை பிடித்த அனைவருக்கும் குழுவில் சார்பாக நினைவு பரிசு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செலினா முன்னிலையில் வழங்கினர். இந்நிகழ்ச்சியின் முன்னாள் மாணவ, மாணவிகள் 1985-86 பேட்ச் குடும்பங்களோடும் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

The post புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 38 ஆண்டுகளுக்கு பின் ஒன்று கூடிய முன்னாள் மாணவர்கள் appeared first on Dinakaran.

Related Stories: