தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்கவாசல் திறப்பு

திருச்சி: வைகுண்ட ஏகாதசியையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசலை கடந்து மணல்வெளி, நடைபந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரேயுள்ள திருக்கொட்டகைக்கு வருகை தந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் இன்று காலை திறக்கப்பட்டது. ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊர் என்பதால் பல்வேறு மாநிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு வேணுகோபால் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வைகுண்ட வாயில் திறக்கப்பட்டது. அதையொட்டி, ஏராளமான பக்தர்கள் வைகுண்ட வாயில் வழியாக வந்தனர். வெள்ளிக் கவச அலங்காரத்தில் பாமா ருக்மணி சமேத வேணுகோபால் உலா வந்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து, சொர்க்கவாசலை கடந்து சென்ற பார்த்தசாரதி பெருமாள் கோவிந்தா..! கோவிந்தா..! என பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்.

மேலும் கரூர், ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சேலம், ஆத்தூர் கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள் சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கோவிந்தா..! கோஷம் முழங்க நம்பெருமாளை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் வைணவ தளங்களில் இன்று சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லாக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பத்தர்களின் கோவிந்தா… ரங்கா… கோஷங்களுக்கிடையே அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

The post தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்கவாசல் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: