மபி காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அதிரடி நீக்கம்

புதுடெல்லி; மத்தியபிரதேச காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத் நீக்கப்பட்டுள்ளார். ஜித்து பட்வாரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால் 230 தொகுதிகள் கொண்ட மபி சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ 163 தொகுதிகளில் வெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. 2018 தேர்தலில் 114 இடங்களில் வென்று காங்கிரஸ் இந்த முறை 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதற்கு காங்கிரஸ் மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் சரியாக ஒருங்கிணைக்காததுதான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. தேர்தல் தோல்விக்கு பிறகு மாநில தலைவர் பதவியில் இருந்து விலகும்படி கமல்நாத்தை காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நேற்று இரவு மபி மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத்தை நீக்க காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். புதிய மாநில தலைவராக ஜித்து பட்வாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே போல் மபி சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக உமாங் சிங்ஹார் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத்தலைவராக ஹேமந்த் கட்டாரே நியமிக்கப்பட்டுள்ளார். சட்டீஸ்கர் சட்டப்பேரவை தேர்தலில் தோற்றாலும் அங்கு மாநில தலைவர் தீபக் பாஜி பதவியில் நீடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் சட்டீஸ்கர் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவராக சரண்தாஸ் மகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post மபி காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அதிரடி நீக்கம் appeared first on Dinakaran.

Related Stories: