தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்: நாளை நடக்கிறது

 

தேனி, டிச. 16: தேனியில் உள்ள நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் நாளை (டிச. 17) சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம் நடக்க உள்ளது. தேனி நகரில் உள்ள தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் நாளை (டிச. 17) காலை 10 மணி முதல் மாலை 3 மணிவரை சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் சிறுநீரக சிறப்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஆர்.செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு பரிசோதனை செய்து ஆலோசனை வழங்க உள்ளார்.

இம்முகாமின்போது, சிறுநீரக கல், சிறுநீரக பையில் கல், சிறுநீரக பாதை அடைப்பு, சிறுநீர் கசிவு, சிறுநீரில் ரத்தம், முதுகுவலி, அடிவயிற்று வலி, சிறுநீர்தொற்று, சிறுநீர் மெல்லியதாக கழீத்தல்,சிறுநீர் கழிப்பதில் சிரமம், இரவில் சிறுநீர் கழித்தல், சிறுநீர் பால் போன்று கழித்தல், சிறுநீரக புற்று நோய் மருத்துவம், சிறுநீர் பாதையில் சதைவளர்ச்சி, தன்னைஅறியாமல் சிறுநீர் கசிவு, வயிற்றிலேயே சிறுநீர் தேக்கம், குழந்தைகள் சிறுநீரக அறுவைச் சிகிச்சை,

இருமும்போதும், தும்மும்போதும் சிறுநீர் கழித்தல், சிறுநீரக கல் நோய் குடும்பத்தில் பலருக்கும் இருத்தல், ஆண் மலட்டுத் தன்மை மற்றும் ஆண்மை குறைவு, ஆணுறுப்பு பிரச்னைகள், ஆண் உடற்கூறு தொந்தரவு உள்ளிட்டவை குறித்து பரிசோனை செய்யப்பட உள்ளது. ஏற்பாடுகளை மருத்துவமனை மேலாளார் சாந்தி, மருத்துவமனை பிஆர்ஓ.க்கள் சலீம், ஷேக், கார்த்திக் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் செய்து வருகிறது.

The post தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனையில் சிறுநீரக சிறப்பு மருத்துவ முகாம்: நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: