தென் ஆப்ரிக்காவுடன் இன்று கடைசி டி20: தொடரை சமன் செய்யுமா இந்தியா?

ஜோகன்னஸ்பர்க்: இந்தியா – தென் ஆப்ரிக்கா மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, வாண்டரர்ஸ் மைதானத்தில் இன்று இரவு 8.30க்கு தொடங்குகிறது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. டர்பனில் நடைபெற இருந்த முதல் டி20 மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், எபேகாவில் நடந்த 2வது டி20ல் தென் ஆப்ரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. அந்த போட்டியில் இந்தியா 19.3 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்த நிலையில், கனமழை கொட்டியதால் ஆட்டம் தடைப்பட்டது. அதன் பிறகு டிஎல்எஸ் விதிப்படி 15 ஓவரில் 152 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 13.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்து வென்றது. தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை வகிக்க, 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு ஜோகன்னஸ்பர்க் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் வென்று 1-1 என தொடரை சமன் செய்ய இந்தியாவும், 2-0 என தொடரைக் கைப்பற்ற தென் ஆப்ரிக்காவும் வரிந்துகட்டுகின்றன.

தென் ஆப்ரிக்கா: மார்க்ரம் (கேப்டன்), மேத்யூ பிரீட்ஸ்கே, டோனோவன் பெரேரா, ஹெய்ன்ரிச் கிளாஸன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (விக்கெட் கீப்பர்கள்), ரீசா ஹெண்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், பெலுக்வாயோ, ஓட்னில் பார்ட்மேன், நாண்ட்ரே பர்கர், ஜெரால்டு கோட்ஸீ, கேஷவ் மகராஜ், லுங்கி என்ஜிடி, லிசார்டு வில்லியம்ஸ், டாப்ரைஸ் ஷம்சி.

இந்தியா: சூரியகுமார் (கேப்டன்), இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்கள்), ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர்.

The post தென் ஆப்ரிக்காவுடன் இன்று கடைசி டி20: தொடரை சமன் செய்யுமா இந்தியா? appeared first on Dinakaran.

Related Stories: