பெருங்களத்தூரில் மிக்ஜாம் புயலில் தென்பட்ட முதலையை போராடி பிடித்த வனத்துறையினர்!

சென்னை: பெருங்களத்தூரில் தென்பட்ட முதலையை வனத்துறையினர் போராடி பிடித்தனர். பெருங்களத்தூரை அடுத்த ஆலம்பாக்கம் பகுதியில் சாலையோரத்தில் முதலை ஒன்று இருப்பது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னை சாலைகளில் பெருமழை மற்றும் வெள்ளத்தின் போது முதலை ஒன்று சாலையில் தென்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மிக்ஜாம் புயலை தொடர்ந்து சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு.. தற்போது பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது. முக்கியமாக நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் வடிந்துள்ளது. அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை வெள்ளம் இன்றி காணப்படுகிறது. அதேபோல் சாலையின் உட்பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளம் வடிந்துள்ளது.

சென்னை மழை காரணமாக ஏரிகளில் தண்ணீர் அளவு அதிகரித்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 8,409 கன அடியாக உயர்ந்தது. இந்த நிலையில் சென்னையில் மழை, புயலுக்கு நடுவே, பெருங்களத்தூர் – நெடுங்குன்றம் சாலையில் உள்ள வேலம்மாள் பள்ளி அருகில் முதலை ஒன்று சாலையை கடக்கும் காட்சி வெளியானது. இது உண்மையான வீடியோ என்று உறுதி செய்யப்பட்டது.

சாலையில் ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் உள்ள பகுதிக்கு முதலை சென்றது. மக்கள் அங்கே பைக்கில் செல்லும் நேரத்தில் அசால்ட்டாக இந்த முதலை கடந்து உள்ளது. அப்போது அங்கே ஒரு வாகன ஓட்டி செல்வதும் படம் பிடிக்கப்பட்டு உள்ளது. இதை நெட்டிசன்கள் பகிர்ந்து இணையம் முழுக்க அப்போது டிரெண்டானது.

இந்த முதலை தற்போது சாலைக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வர தொடங்கி உள்ளன. சென்னையில் பெருங்களத்தூரில் உள்ள சாலை ஒன்றில் உடல் மெலிந்த நிலையில் சுவருக்கு அருகே ஒன்றி கிடப்பது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. அதன்படி அந்த முதலையை வனத்துறையினர் போராடி பிடித்தனர்.

The post பெருங்களத்தூரில் மிக்ஜாம் புயலில் தென்பட்ட முதலையை போராடி பிடித்த வனத்துறையினர்! appeared first on Dinakaran.

Related Stories: