கும்பகோணத்தில் உலக நீரிழிவுநோய் தின விழிப்புணர்வு பேரணி

 

கும்பகோணம், டிச.12: கும்பகோணத்தில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்
கும்பகோணத்தில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நீரிழிவு நோய் வராமல் தடுப்பது குறித்தும், கண்தானம் வழங்குவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாசன் கண் மருத்துவமனை சார்பில் கும்பகோணம் மகாமககுளக்கரையில் தொடங்கிய இப்பேரணியை
டிஎஸ்பி கீர்த்திவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஜாவிட் ஹூசைன் முன்னிலை வகித்தார்.

கிளையின் மேலாளர் அஸ்வத் ராமன் வரவேற்றார். தொடர்ந்து மாநகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று நாகேஸ்வரன்கோவில் சன்னதி தெருவில் நிறைவுபெற்றது. நீரிழிவு நோயை தடுப்பது குறித்தும், கண்தானம் வழங்குவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் இப்பேரணியில் கலந்து கொண்டனர். பொதுமேலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார். இப்பேரணியில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் மாவட்ட துணைத்தலைவர் பழ.அன்புமணி, தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். பேரணிக்கான ஏற்பாடுகளை மார்க்கெட்டிங் துறையின் தென்மண்டல தலைமை அதிகாரி முருகானந்தம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post கும்பகோணத்தில் உலக நீரிழிவுநோய் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: