திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண் சரிவு காரணமாக போக்குவரத்து நிறுத்தம்: சீரமைக்கும் பணி தீவிரம்

திருத்தணி: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த 4 தேதி கன மழை பெய்தது. இதனால் திருத்தணி முருகன் கோவில் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. பின்னர் அதனை தற்காலிகமாக மணல் மூட்டைகளைக் கொண்டு சரி செய்து போக்குவரத்து ஏற்படுத்தினார். இந்நிலையில் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, திருத்தணி தொகுதி எம்எல்ஏ எஸ்.சந்திரன், இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர் குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது அமைச்சர் ஆர்.காந்தி உடனடியாக சீரமைப்பு பணியினை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் இத்தனை மலைக்கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மலைக் கோவிலுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் நுழைவுப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பல்வேறு பகுதியில் இருந்து வாகனத்தில் வருகை தந்த பக்தர்கள் படி வழியாகச் சென்று முருகனை தரிசித்து வருகின்றனர்.

 

The post திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் மண் சரிவு காரணமாக போக்குவரத்து நிறுத்தம்: சீரமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: