பாரீஸ் : தீக்கிரையான பிரான்ஸ் நாட்டின் 800 ஆண்டுகள் பழமையான நாட்ரி டாம் தேவாலய புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து 2024-ல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பாரீஸ் நகரின் அடையாள சின்னமாக விளங்கும் இந்த தேவாலயத்தின் மேற்கூரையில் கடந்த 2019-ல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தேவாலயம் உருக்குலைந்து போனது. பிரான்ஸ் மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த தேவாலய மீண்டும் புதுப்பிக்க வேண்டி புனரமைப்பு பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் 2024-ல் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு திறக்க முடிவு செய்துள்ளதாக பிரான்ஸ் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
The post தீக்கிரையான பிரான்ஸ் நாட்டின் 800 ஆண்டுகள் பழமையான நாட்ரி டாம் தேவாலயம் : 2024-ல் மீண்டும் திறப்பு!! appeared first on Dinakaran.
