சந்தையில் வரத்து குறைந்ததால் வெங்காயம், பூண்டு விலை கிடுகிடு உயர்வு.. சென்னையில் முதல் தர பூண்டின் விலை கிலோ ரூ.300-ஐ தொட்டது..!!

சென்னை: மோசமான வானிலை காரணமாக பூண்டு விளைச்சல் எதிரொலியாக அவற்றின் சிலரை விலை சென்னையில் கிலோ ரூ.300 அதிகரித்து இருக்கிறது. சமையலுக்கான அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் முக்கிய இடத்தில் வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் விலை சமீப நாட்களாக உயர்ந்து வருகிறது. விளைச்சல் உயர்வு காரணமாக சந்தைகளுக்கு வரத்து சரிந்துவிட்டதால் வெங்காயம், பூண்டு ஆகியவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

அதுவும் தரமான பூண்டின் கொள்முதல் விலை கிலோ ரூ.250ஆக உயர்ந்துவிட்டதால் சென்னையில் அதன் சில்லறை விலை கிலோ ரூ.300 தொட்டுள்ளது. வெங்காயத்தின் விலையும் ரூ.100 நெருங்கி வந்த நிலையில் வெங்காய ஏற்றுமதி குறைக்கப்பட்டதால் தற்போது ரூ.60ஆக குறைந்துள்ளது. மூன்றாவது ரக பூண்டு கிலோ ரூ.200க்கும், இரண்டாம் ரக பூண்டு கிலோ ரூ.250க்கும் விற்கப்படுகின்றன. கிலோ ரூ.100 விலை போன பூண்டு சில வாரங்களிலேயே ரூ.300ஐ எட்டி இருப்பதால் வாடிக்கையாளர்கள் கிராம் கணக்கில் தான் பூண்டினை வாங்கி செல்கின்றனர்.

மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்தும் குறைந்து விட்டது. இதன் காரணமாக காய்கறிகளின் விலையும் குறிப்பிட்ட அளவு உயர்வை கண்டுள்ளது. பூண்டு, வெங்காயம் ஆகியவை பெரும்பாலும் மராட்டிய மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் தான் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக மோசமான வானிலை காரணமாக சாகுபடி பாதிக்கப்பட்டதால் சந்தைகளுக்கு போதுமான பூண்டு வரவில்லை. இதன் காரணமாக பூண்டின் விலை மேல்நோக்கி தாவ தொடங்கியுள்ளது. இந்த விலை ஏற்றம் பூண்டு விநியோகம் சீராகும் வரை தொடரும் என்றும் வியாபாரிகள் தை பிறந்தால் வழி பிறக்கும் என்கின்றனர்.

The post சந்தையில் வரத்து குறைந்ததால் வெங்காயம், பூண்டு விலை கிடுகிடு உயர்வு.. சென்னையில் முதல் தர பூண்டின் விலை கிலோ ரூ.300-ஐ தொட்டது..!! appeared first on Dinakaran.

Related Stories: