காந்தி, நேரு பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு நாளை (12ஆம் தேதி) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுபோட்டிகள் நடக்கிறது. தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் சித்ரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறி ஞர் அண்ணா, முத்தமிழறி ஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக் குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பின்படி, பெரம்பலூர் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தத் திட்டமிடப்பட்டது.

The post காந்தி, நேரு பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி appeared first on Dinakaran.

Related Stories: