மழை நீர் வெளியேற்றப்பட்டு நாளை பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கேஎன்.நேரு அவர்கள் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் விதைகள் அமைப்பின் சார்பாக அரும்பாக்கம் பகுதி மக்களுக்கு மழைக்கால நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். கனமழையால் பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் விதமாக 600 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள்

9 நாட்களுக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை திறக்கப்படவுள்ளது. 4 மாவட்டங்களில் 14 பள்ளிகள் மட்டும் திறக்க முடியாத நிலையில் இருப்பதாக கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 4,435 பள்ளிகளில் மழை நீர் சூழ்ந்திருந்தது. தற்போது மழை நீர் வெளியேற்றப்பட்டு நாளை பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் 20,000 புத்தகங்கள் சேதுமடைந்துவிட்டதாக தகவல் பெறப்பட்டுள்ளது. 32 பள்ளிகளில் மட்டும் சுவற்றில் தண்ணீர் ஊறுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த பள்ளிகளை நேரில் ஆய்வு செய்து பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்போம்.

மழையால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நடத்துவது குறித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார்.

The post மழை நீர் வெளியேற்றப்பட்டு நாளை பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன: அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Related Stories: