காசாவில் போரை நிறுத்துவதற்கான ஐநாவின் தீர்மானத்தை வீட்டோ மூலம் நிராகரித்தது அமெரிக்கா

 

நியூயார்க்: காசாவில் போரை நிறுத்துவதற்கான ஐநா தீர்மானத்தை வீட்டோ அதிகாரம் மூலம் அமெரிக்கா நிராகரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேல்- காசா போரை கைவிட வேண்டும் என்று இஸ்ரேலை உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் பேரழிவை தடுப்பதற்காக பாதுகாப்பு கவுன்சிலில் முறையிடுவதற்கு ஐநா சாசனத்தில் 99வது பிரிவை ஐநா பொது செயலாளர் அன்டனியோ கட்டாரெஸ் செயல்படுத்தினார். இதனை தொடர்ந்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காசா மீதான போரை உடனடியாக நிறுத்தக்கோரி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 15 உறுப்பினர்கள் கொண்ட ஐநா பாதுகாப்பு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 13 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. இங்கிலாந்து இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி போர் நிறுத்தத்துக்கு எதிரான தீர்மானத்தை நிராகரித்தது. தீர்மானத்தை நிராகரிப்பது குறித்து அமெரிக்காவுக்கான தூதர் ராபர்ட் உட் விளக்கமளிக்கையில்‘‘அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேல் மீதான ஹமாஸின் பயங்கர தாக்குதல் குறித்து தீர்மானத்தில் ஏன் கண்டிக்கப்படவில்லை என்பது புரியவில்லை. எங்களின் அனைத்து பரிந்துரைகளும் புறக்கணிக்கப்பட்டன. எனவே இதனை ஆதரிக்க முடியவில்லை” என்றார்.

The post காசாவில் போரை நிறுத்துவதற்கான ஐநாவின் தீர்மானத்தை வீட்டோ மூலம் நிராகரித்தது அமெரிக்கா appeared first on Dinakaran.

Related Stories: