மின் வாரிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

 

ஈரோடு,டிச.9: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று முன் தினம் பரிசுகள் வழங்கப்பட்டன. ஈரோடு மின் பகிர்மான வட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மத்திய திறனூக்கச் செயலகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆகியன இணைந்து பள்ளிகளில், ஆற்றல் மன்றம் மூலமாக மின் சேமிப்பு, மின் ஆற்றல் மற்றும் மின்பாதுகாப்பு என்ற தலைப்பில் கட்டுரை,ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் மொத்தம் 36 அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.இதில், ஒவ்வொரு பள்ளி அளவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஈரோடு அருகே உள்ள தனியார் கல்லூரியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.விழாவுக்கு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மு.கலைச்செல்வி தலைமை வகித்தார்.

இதில், அனைத்துப் பள்ளிகளின் ஆற்றல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள், மின்வாரிய செயற் பொறியாளர்கள், உதவிச் செயற்பொறியாளர்கள்,உதவி மின்பொறியாளர்கள்,தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு கிளை நிர்வாகிகள், கல்வித் துறை அலுவலர்கள் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.

The post மின் வாரிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு appeared first on Dinakaran.

Related Stories: