`உதாசீனப்படுத்திய பாஜ இனி வேண்டாம்’ ஆந்திர தேர்தலில் ஜனசேனா- தெலுங்கு தேசம் கூட்டணி: சந்திரபாபு நாயுடு ‘மாஸ்டர் பிளான்’

திருமலை: தெலங்கானா பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆரம்பத்தில் இருந்து பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிடவே விரும்பினார். பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை 2 முறை தனித்தனியாக டெல்லிக்கு சென்று சந்தித்தார். ஆனால், தெலுங்கு தேசம் கட்சியை கூட்டணியில் பாஜ சேர்க்கவில்லை. ஆனால் தெலங்கானா தேர்தலில் சந்திரபாபு, காங்கிரசுடன் மறைமுக கூட்டணி அமைத்ததாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சந்திரபாபுவும், ஜனா சேனா தலைவர் பவன்கல்யாணும் ரகசியமாக சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசியதாக கூறப்படுகிறது. எனவே வரும் ஆந்திர சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் சேராமல் சந்திரபாபு- ஜனசேனா கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளனர். தெலங்கானாவில் காங்கிரசுடன் மறைமுகமாக அமைத்த கூட்டணியை போன்று, ஆந்திராவிலும் கூட்டணி அமைத்து, ஜெகன்மோகனையும், பாஜகவையும் தோற்கடிக்க சந்திரபாபு மாஸ்டர் பிளான் போட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

The post `உதாசீனப்படுத்திய பாஜ இனி வேண்டாம்’ ஆந்திர தேர்தலில் ஜனசேனா- தெலுங்கு தேசம் கூட்டணி: சந்திரபாபு நாயுடு ‘மாஸ்டர் பிளான்’ appeared first on Dinakaran.

Related Stories: