ரயில்வே குட்ஷெட்டில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும்

திருச்சி, டிச.8: திருச்சி ரயில்வே குட்ஷெட்டில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்று சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருச்சி குட்ஷெட் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க (சிஐடியூ) 27வது ஆண்டு பேரவை கூட்டம் நேற்று வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது.சங்கத் தலைவர் சேகர் தலைமை வகித்தார். சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். சங்க செயலாளர் வெள்ளைச்சாமி சிறப்புரையாற்றினார்.

இதில் திருச்சி ரயில்வே குட்ஷெட்டில் சுமார் 300 சுமைப்பணித் தொழிலாளர்கள் இரவு பகலாக வேலை செய்து வருகின்றனர். டெல்டா மாவட்டங்களுக்கு உரம், பூச்சி மருந்து. கோதுமை உட்பட உணவு பொருட்களை அனுப்பி வைக்கிறார்கள். இவர்கள் வேலைக்காக இரவு பகலாக இங்கேயே தங்க வேண்டி உள்ளது. எனவே இவர்களுக்கு ஓய்வறை, கேண்டீன், கழிப்பிட வசதி உட்பட அடிப்படை வசதிகளை ரயில்வே நிர்வாகம் செய்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் தலைவராக சேகர், செயலாளராக வீரபாண்டியன், பொருளாளராக அசோக்குமார் உள்பட 11 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது. சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவகுமார் நிறைவுரையாற்றினார். முடிவில் பொருளாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.

The post ரயில்வே குட்ஷெட்டில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: