வறட்டுப்பள்ளம் அணை நிரம்பியதால் தாழ்வான பகுதி வாழ் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

 

அந்தியூர்,டிச.8: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்குதியில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இது பாசனத்திற்கும் மீன் வளர்ப்பிற்கு மற்றும் வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் அணையாகவும் பயன்பட்டு வருகிறது. இதன் நீர் பிடிப்பு பகுதிகளான கும்பரவாணி பள்ளம்,கல்லுபள்ளம்,தாமரைக்கரை மேற்கு பகுதி,வரட்டுப்பள்ளம் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையினால் அதன் முழு கொள்ளளவான 33.76 அடியை எட்டும் நிலையில் உள்ளது. நேற்று முன்தினம் 11 செ.மீ மழை இங்கு பதிவாகி இருந்தது.இதன் உபரிநீர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் வெளியேறும் எந்த நேரத்திலும் வெளியேறும்.

இந்நிலையில் வட்டக்காடு, மூலக்கடை, சங்கராப் பாளையம், எண்ணமங்கலம், கெட்டி சமுத்திரம் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போருக்கு வெள்ள அபாய முன் எச்சரிக்கையை பொதுப்பணித்துறையினர், பேரிடர் மேலாண்மை துறை விடுத்துள்ளனர்.மேலும் முக்கிய இடங்களில் ஒலிபெருக்கிகள் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கையினை பொதுமக்களுக்கு விடுத்து வருகின்றனர்.

இதில் வரட்டுப்பள்ளம் அணையின் உபரி நீர் செல்லும் ஓடைகளில் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும்,அதே போல் உபரி நீர் செல்லும்போது தண்ணீரில் இறங்கவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது.மேலும் இதில் கால்நடைகளைக் குளிப்பாட்டக் கூடாது எனவும் தெரிவித்தனர்.  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ராஜகோபால்,ஊராட்சி தலைவர் குருசாமி, விஏஓக்கள் சதீஷ்குமார், செல்வராஜ் ஆகியோர் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

The post வறட்டுப்பள்ளம் அணை நிரம்பியதால் தாழ்வான பகுதி வாழ் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: