மழைநீர் வெளியேறாததால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார் அமைச்சர்


தண்டையார்பேட்டை:, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள 4வது மண்டல அலுவலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், துணை மேயர் மகேஷ்குமார் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.கே.நகர் எம்எல்ஏ எபினேசர், மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது மழை வெள்ளம் தேங்கிய பகுதிகளில் இருந்து தண்ணீரை மின்மோட்டார் மூலம் அகற்றவும், மின்சாரம் விநியோகம் செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பதாக இருந்தது. ஆனால், வரும் வழியில் திருவொற்றியூர் நெடுஞ்சாலை தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே வண்ணாரப்பேட்டை வீரா குட்டி தெரு, மேயர் பாசுதேவ் தெருவை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த அமைச்சர், பொதுமக்களைச் சந்தித்து, குறைகளை கேட்டார். அப்போது, 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவிக்கிறோம். மழைநீரையும் அகற்றவில்லை எனக் கூறினர். இதனால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் அமைச்சர் சேகர்பாபு உறுதியளித்தார்.

The post மழைநீர் வெளியேறாததால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினார் அமைச்சர் appeared first on Dinakaran.

Related Stories: