₹2.49 கோடி மோசடி புகார்; ராசிபுரம் பெண் கவுன்சிலர் கணவரிடம் விசாரணை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், மோகனூர் திமுக பேரூர் செயலாளர் செல்லவேல். இவர் நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், கடந்த மாதம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘ராசிபுரம் நகராட்சி 12வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் சசிரேகா, அவரது கணவர் சதீஷ், மாமனார் வெங்கடாசலபதி ஆகியோர், பாதி விலையில் கார்களை வாங்கி தருவதாக கூறினர்.

இதை நம்பி ₹2 கோடியே 49 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்தேன். ஆனால், அவர்கள் கூறியபடி கார்களை பாதி விலைக்கு வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இதுகுறித்து நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சதீஷ், சசிரேகா மற்றும் வெங்கடாசலபதி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். கணவன், மனைவி இருவரையும் தனித்தனியாக அழைத்து, குற்றப்பிரிவு போலீசார், கடந்த மாதம் வெவ்வேறு நாட்களில் விசாரித்தனர்.

இந்நிலையில் நேற்று, கவுன்சிலர் சசிரேகா, அவரது கணவர் சதீஷ் ஆகிய இருவரும், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் போலீசார் 3 மணி நேரம் வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் அனுப்பி வைத்தனர். இருவரிடமும் இன்றும் (5ம்தேதி) விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

The post ₹2.49 கோடி மோசடி புகார்; ராசிபுரம் பெண் கவுன்சிலர் கணவரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: