சென்னையில் மழை நின்றவுடன் 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: சென்னையில் மழை நின்றவுடன் 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மின்சாரம் வழங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை எனவும் மக்கள் பாதுகாப்பு கருதியே மின்விநியோகம் நிறுத்தம் எனவும் அமைச்சர் பேட்டியளித்தார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் வேகமாக கரையை நெருங்கி வரும் நிலையில் சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர்மழையால் சென்னை உள்ளிட்ட பகுதிகள் பாதிப்படைந்துள்ளது. மிக்ஜாம் புயல் நாளை (05-12-2023) முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாகக் கடக்க வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

துணை மின் நிலையங்களில் தேங்கியுள்ள தண்ணீரால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின் நிலையங்களில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால், மின்சாரத்தை கவனத்துடன் கையாள வேண்டியுள்ளது. மழை பொழிவு குறைந்ததும் உடனடியாக மின் விநியோகம் சீராக வழங்கப்படும். அதுவரை பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் மழை நின்றவுடன் 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். “சென்னையில் பெய்து வரும் அதிகனமழையால் பாதுகாப்பு கருதியே மின்விநியோகம் நிறுத்தம். மின்சாரம் வழங்குவதில் எந்த பிரச்னையும் இல்லை.

மழை நின்றவுடன் 2 மணி நேரத்துக்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும். மின் வாரிய தலைமை அலுவலகம் 24 மணி நேரமும் போர்க்கால அடிப்படையில் இயங்கும். சென்னையில் மின் பாதிப்புகளை சரிசெய்ய, மற்ற மாவட்டங்களில் இருந்து மின் துறை ஊழியர்கள் வரவழைப்பு” என மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் மழை நின்றவுடன் 2 மணி நேரத்தில் மின்சாரம் வழங்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Related Stories: