சென்னை: சென்னையில் 7ம் தேதி பாமக மாவட்ட செயலர்கள் கூட்டம் நடைபெறுவதாக அன்புமணி அறிவித்துள்ளார். இதுகுறித்து பாமக வெளியிட்ட அறிக்கை: பாமக மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டம் வரும் 7 நாள் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை தியாகராயர் நகரில் உள்ள சர்.பிடி தியாகராயர் அரங்கத்தில் நடைறுகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகிக்கிறார். கட்சி தலைவர் அன்புமணி தலைமை ஏற்கிறார். பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொள்வர். மாவட்ட செயலர்கள், மாவட்ட தலைவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 7ம் தேதி பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.
