விரைவில் சீரமைக்க கோரிக்கை அமைச்சர் பிறந்த நாள் விழா அன்னதானம், நலஉதவி வழங்கி கொண்டாட்டம்

துவரங்குறிச்சி, டிச.3: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்த நாளை முன்னிட்டு மருங்காபுரி வடக்கு, மத்திய மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் ரதி ரமேஷ் பொன்னம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு ,பேனா, புத்தகங்கள் மற்றும் பள்ளிக்கு தளவாட பொருட்கள் வழங்கினார்.

மருங்காபுரி வடக்கு ஒன்றியம் மற்றும் மத்திய ஒன்றியம் சார்பில் மேட்டுப்பட்டியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விளையாட்டு மேம்பாட்டு அணி ஏற்பாட்டில் தொட்டியபட்டியில் அமைந்துள்ள விடிவெள்ளி ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கப்பட்டது. வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் சிவக்குமார், பொருளாளர் செல்வராஜ், செந்தில் குமார், வேட்டை கணேசன், மணி செல்வம், சேதுராமன், சோலை சதீஷ், சிவராமன், சாமிக்கண்ணு, சரவண பெருமாள், ஜெயக்குமார், மகளிர் அணி லதா, ராணி கலந்து கொண்டனர்.
மத்திய ஒன்றியம் கருமலை, பாலக்குறிச்சி, வளநாடு பொது மக்களுக்கு மத்திய ஒன்றியம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து தொட்டியபட்டி ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு மதிய உணவு வழங்கினர். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் பழனியாண்டி, அவைத் தலைவர் நல்லையா, பொருளாளர் பழனிச்சாமி, கருப்பையா, கணேசன், அசோக் ராஜன், காசிராமன், சந்திரசேகர், இளையராஜா, இளைஞரணி கார்த்திகன்,வழக்கறிஞர் முகமது ஆரிப் ஆகியோர் கலந்துகொண்டனர். இதேபோல தெற்கு ஒன்றியம் சார்பில் வேலகுறிச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலாளர் சின்ன அடைக்கண் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post விரைவில் சீரமைக்க கோரிக்கை அமைச்சர் பிறந்த நாள் விழா அன்னதானம், நலஉதவி வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: