மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பெரம்பலூரில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி துவக்கம்

பெரம்பலூர்,டிச.3: முத்தமிழறிஞர் டாக்டர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, திமுக மாநில இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, திமுக துணைப் பொது செயலாளர் ஆ.ராசா எம்பி, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி, ஆகியோரது வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் மாவட்ட அளவிலான வாலிபால் விளையாட்டுப் போட்டியின் முதல் நாளான நேற்று (2ம் தேதி) சனிக்கிழமை காலை நடைபெற்ற தொடக்க விழாவிற்கு, பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் களத்தூர் கார்மேகம் தலைமை வகித்தார். மாவட்ட துணை அமைப் பாளர் குணசேகரன் வரவேற்றார்.

மாவட்ட துணை அமைப்பாளர்கள் சாம்ராஜ், மனோகர், வெற்றிவேல், ரகு பிர னேஷ், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகளை பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.விழாவில் தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன்,திமுக மாவட்ட துணைச்செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், சன். சம்பத், ஒன்றிய செயலாளர்கள் ராஜ்குமார், நல்லதம்பி, ஜெகதீசன், டாக்டர் வல்லபன், நகராட்சி தலைவர் அம்பிகா, வேப்பந்தட்டை ஒன்றிய குழு துணைத் தலைவர் ரெங்கராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண் டனர். விளையாட்டு போட்டியில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பொது அணியினர் மற்றும் கல்லூரி அணியினர் என 32 வாலிபால் அணியினர் பங்கேற்றுள்ளனர்.

2ம் நாளான இன்று மாவட்ட அளவிலான வாலிபால் விளையாட்டுப் போட்டியின் அரையிறுதிப் போட்டியும், பின்னர் இறுதிப் போட்டியும் நடை பெற உள்ளது. முடிவில் வெற்றிபெற்ற அணியினருக்கு முதல் பரிசாக ரூ.15,000 ரொக்கம் மற்றும் சுழல் கோப்பை, 2ம் பரிசாக ரூ.10,000, 3ம் பரிசாக ரூ.7500, 4ம் பரிசாக 5000 ரொக்க பரிசு மற்றும் சுழல் கோப்பைகள் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளன.போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியினர், மாவட்ட அமைப்பாளர் கார் மேகம் தலைமையில் செய்துள்ளனர்.

The post மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பெரம்பலூரில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: