2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை: மனைவிக்கும் விஷம் கொடுத்தார்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே நாகரசம்பட்டி என்.தட்டக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கடலரசு(35). இவருக்கு ஜனனி(27) என்ற மனைவியும், திவான்ராஜ்(4) என்ற மகனும், நிவன்திக்கா(2) என்ற மகளும் இருந்தனர். ஜனனிகடலரசு இடையே கருத்து வேறுபாட்டால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், திருமண நாளான நேற்று மனைவி,குழந்தைகளைபெரியமலை தீர்த்தம் கோயிலுக்கு அழைத்து சென்ற கடலரசு, அங்கு விஷத்தை எடுத்து குடித்துள்ளார். இதைபார்த்துஅதிர்ச்சியடைந்த ஜனனி வாயிலும் ஊற்றியுள்ளார். உடனே, அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கடலரசு 2 குழந்தைகள் வாயிலும் விஷத்தை ஊற்றி, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

அப்பகுதியில் இருந்தவர்களிடம் ஜனனி விவரத்தை தெரிவிக்கவே 4 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் 2 குழந்தைகள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கடலரசு மற்றும் ஜனனிக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

The post 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை: மனைவிக்கும் விஷம் கொடுத்தார் appeared first on Dinakaran.

Related Stories: