உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

 

ஈரோடு, டிச.2: உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொடங்கி வைத்தார். பின்னர் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பில் உலக எய்ட்ஸ் தின உறுதி மொழியேற்பு நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து எச்ஐவி எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட நாடகம் மற்றும் ரீல் மேக்கிங் போட்டிகளில் வெற்றி பெற்ற நபர்களுக்கும் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடத்தப்பட்ட வினாடி, வினா போட்டியில் வெற்றி பெற்ற நபர்களுக்கும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

பேரணியில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் 200 கல்லூரி மாணவ, மாணவிகள் எச்ஐவி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களிட்டும் பேரணியில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், எஸ்பி ஜவகர், இணை இயக்குநர் (நலப்பணிகள்) பிரேமகுமாரி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர்) சோமசுந்தரம் துணை இயக்குநர் (குடும்ப நலம்) செந்தில்குமார், மாநகர நல அலுவலர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: