திருச்சியில் பாலியல் தொழில், வழிபறியில் சிக்கிய இருவர் குண்டாசில் கைது

திருச்சி, டிச.1:திருச்சியில் பாலியல் தொழில் மற்றும் வழிபறி வழக்கில் கைதான இருவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். நவ.13ம் தேதி அரியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருமகள் தெருவில் நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றதாக அளித்த புகாரின் பேரில் போலீசார், மேல அம்பிகாபுரத்தை சேர்ந்த ரவுடி வெற்றி(31) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் இவர் மீது திருச்சி மாநகரில் கொலை, கத்தியை காட்டி பணம் பறித்ததாக 5 வழக்குகள், வழிபறியில் ஈடுபட்டதாக 4 வழக்கு, தஞ்சாவூர் மாவட்டத்தில் வழிப்பறி செய்ததாக 5 வழக்கு, பூட்டியிருந்த வீட்டில் திருடியதாக 2 வழக்கு, அரியலூர் மாவட்டத்தில் வழிப்பறி மற்றும் பணத்தை பறித்ததாக 3 வழக்குகள் உட்பட மொத்தம் 21 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

கடந்த நவ.5ம் தேதி செசன்ஸ் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள ஹோட்டலில் ஸ்பா நிலையத்தில் பெண்கள் மற்றும் சிறுமியை வைத்து பாலியல் தொழில் நடத்தியதாக ராஜா காலனியை சேர்ந்த ராம்குமார்(47) மற்றும் நான்கு நபர்கள் பெண்கள், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுப்படுத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

எனவே, வெற்றி என்பவர் தொடர்ந்து திருட்டு, வழிப்பறி மற்றும் கொள்ளையடித்து செல்லும் செயல்களில் ஈடுபவர் எனவும், ராம்குமார் பெண்கள், சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்பவர் எனவும் விசாரணையில் தெரியவந்ததால், தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அளித்த அறிக்கையினை பரிசீலனை செய்த, மாநகர போலீஸ் கமிஷனர் இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள இருவர் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைத்தனர்.

The post திருச்சியில் பாலியல் தொழில், வழிபறியில் சிக்கிய இருவர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Related Stories: