திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச.1: திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், பங்கேற்க வந்த விவசாயிகளில் 50க்கும் மேற்பட்டோர் குறைதீர் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர். தமிழக விவசாயிகள் சங்கத்தின் (கட்சி சார்பற்றது) மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையில் வெளிநடப்பு செய்த விவசாயிகள், கலெக்டர் அலுவலகம் முன் கறுப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உள்ளிருப்பு போராட்டம்: இதேபோல, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரக கூட்டரங்கத்துக்கு முன், நுழைவு வாயிலில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதையடுத்து, அய்யாக்கண்ணு உள்ளிட்ட நிர்வாகிகள் சிலரை மட்டும் கலெக்டர் பிரதீப்குமார், நேரில் அழைத்து போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

The post திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: