அமைச்சருக்கு எம்எல்ஏ வாழ்த்து புகையிலை பொருள்கள் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

ஈரோடு, நவ.30: தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், மொடக்குறிச்சி, காஞ்சிக்கோயில், பவானி மற்றும் கோபி போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை தங்களது கடைகளில் வைத்து விற்பனை செய்து வந்த மொடக்குறிச்சி, சாமிநாதபுரம், கரட்டான்காடு பகுதியை சேர்ந்த காமராஜன் (32), நஞ்சை ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த முருகேசன் (57), காஞ்சிக்கோயிலை அடுத்துள்ள கருக்கம்பாளையத்தைச சேர்ந்த லோகநாதன் (26), பவானியை அடுத்துள்ள பெருமாள்புரத்தை சேர்ந்த மலர்விழி (44), கோபி, சத்திரோட்டை சேர்ந்த முகமது சையது (21) ஆகியோர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.1,080 மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.

The post அமைச்சருக்கு எம்எல்ஏ வாழ்த்து புகையிலை பொருள்கள் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: